Meta tags:
description= Latest Tamil news Tamil Newspaper Election Latest News Tamil Loksabha Election 2024 - Maalaimalar;
keywords= Tamil News Maalaimalar Election Latest News Tamil Loksabha Election 2024 Latest News Update Tamil Politics Sports IPL 2024 Live News Cinema Tamil News Live India News Chennai News Tamilnadu News Update;
author= maalaimalar;
Headings (most frequently used words):
சென்னை, ரஜினிகாந்த், நிர்வாகம், மாவட்ட, வெளியிட்டது, நகலை, ஆவண, புகார், மீது, வேட்புமனு, அண்ணாமலை, லுக்கில், மிரட்டல், தலைவர், அப்டேட், கொடுத்த, லோகேஷ், ஒரே, தேர்வு, 171, 660, இயக்கும், படத்தை, 44, சூர்யா, விலை, ஸ்பெஷல், எடிஷன், மாடல், அம்சங்கள், என்னென்ன, சுப்பராஜ், கார்த்திக், கஷ்டமப்பா, ஆசிரியர், சிட்டி, saved, trending, shots, stories, home, வங்காளம், மேற்கு, பிரதேசம், உத்தரப், மலர், என், வைபவ், மாறிய, கேங்க்ஸ்டராக, பலப்பரீட்சை, அறிமுகமான, சின்னர், மெட்வதேவ், அரையிறுதியில், ஓபன், மியாமி, சண்முகம், வி, சி, சமாளித்த, பின்பு, உளறி, சின்னமா, பம்பரம், தேமுதிகவிற்கு, டிரைடன்ட், விமானங்கள், இந்தியாவில், தமிழிசையிடம், தள்ளுபடி, மனு, பெரியசாமியின், முறைகேடு, ஒதுக்கீடு, வீட்டுமனை, வாரிய, வசதி, வீட்டு, கேள்வி, செல்வப்பெருந்தகை, உள்ளது, பணமா, வாய்ப்பு, இல்லாத, சீதாராமனிடம், நிர்மலா, கேப்பிட்டல்ஸ், டெல்லி, செய்தது, பந்துவீச்சை, எதிராக, அணிக்கு, ராஜஸ்தான், 2024, எல், மீண்டும், வழங்க, பயணிகள், மும்பை, தப்பிய, உயிர், மோதலில், பி, இரு, ஓடிய, ரன்வேயில், ப்ராவோ, ஊக்கப்படுத்திய, வீரரை, இளம், அணியின், வருவாய், மறுத்த, மீண்டெழுந்து, நீ, கண்டிப்பாக, கடிதம், எழுதிய, காந்தி, வருண், மக்களுக்கு, தொகுதி, பா, menu,
Text of the page (most frequently used words):
2024 (30), #இந்த (24), #march (18), #தேர்தல் (17), gmt (17), #மற்றும் (16), #மேலும் (13), #அண்ணாமலை (11), #சென்னை (10), #படிக்க (10), படம் (10), #சுப்பராஜ் (9), சினிமா (9), போட்டியில் (9), எல் (9), டிரைடன்ட் (9), ஆண்டு (9), தலைவர் (8), 171 (8), வருண் (8), செய்திகள் (8), கார்த்திக் (8), காந்தி (8), ஐபிஎல் (8), இந்தியா (8), #டெல்லி (8), news (7), தமிழ்நாடு (7), எம் (7), முதல் (7), இருக்கிறது (7), ரஜினிகாந்த் (7), லோகேஷ் (7), ஸ்பெஷல் (7), தொகுதி (7), வெற்றி (6), பிலிபித் (6), ரன்கள் (6), தனது (6), வாய்ப்பு (6), இந்நிலையில் (6), 660 (6), மனு (6), போட்டியிட (6), புகார் (6), ராஜஸ்தான் (6), இது (6), 2023 (6), புதிய (6), என்று (5), வேட்புமனு (5), விமான (5), மாடல் (5), நிர்மலா (5), உங்கள் (5), அதிக (5), வகையில் (5), சூர்யா (5), நான் (5), வீரர் (5), வீட்டு (5), பிரதமர் (5), பெரியசாமி (5), follow (5), கொடுத்த (5), வசதி (5), மும்பை (5), கனகராஜ் (5), tamil (5), எடிஷன் (5), அவரது (5), இவர் (5), அப்டேட் (4), இரு (4), பயணிகள் (4), இருந்து (4), ஆவண (4), இண்டிகோ (4), கொல்கத்தா (4), படத்தின் (4), ஏர் (4), அணி (4), ஒரு (4), டிரையம்ப் (4), எதிராக (4), பதிவிட்டுள்ளார் (4), கர்நாடகா (4), 2022 (4), தாக்கல் (4), முடிவுகள் (4), க்வேனா (4), வேட்பு (4), படத்தை (4), பாஜக (4), நகல் (4), இளம் (4), தொடர்பாக (4), விக்கெட் (4), வைத்து (4), உலகம் (4), வழங்கப்பட்டு (4), என்பது (4), பாராளுமன்ற (4), ஒரே (4), தேர்வு (3), மார்ச் (3), முத்திரைத்தாளில் (3), மிகப்பெரிய (3), மத்தியில் (3), உள்ள (3), சிறப்பு (3), முறைகேடு (3), நிலையில் (3), நடிக்கும் (3), அதிமுக (3), நாம் (3), கொண்ட (3), சார்பில் (3), தமிழர் (3), அமைச்சர் (3), தொடர்பான (3), தமிழ்நாட்டில் (3), உள்ளது (3), பக்கத்தில் (3), ஆட்சிக்காலத்தில் (3), மாடலில் (3), நிர்வாகம் (3), மாவட்ட (3), தள்ளுபடி (3), நகலை (3), பெற்றது (3), ஆணையம் (3), மீது (3), என்ஜின் (3), எஸ் (3), செல்வப்பெருந்தகை (3), இயக்கும் (3), செய்தது (3), சீதாராமன் (3), கேப்பிட்டல்ஸ் (3), ஓவரில் (3), நடந்த (3), மபாகா (3), வரை (3), இயக்குநர் (3), உள்ளார் (3), முறை (3), எனது (3), யாக (3), அவர் (3), வீடியோ (3), கிரிக்கெட் (3), அணிகள் (3), ப்ராவோ (3), ரன்வேயில் (3), ipl (3), ஐதராபாத் (3), ஆனால் (3), பைக் (3), அதில் (3), தான் (3), என்ற (3), பந்துவீச்சை (3), என் (3), கட்சி (3), கடந்த (3), விமானம் (3), உயிர் (3), உருவாக்கப்பட்டு (2), தமிழிசை (2), இந்தியன்ஸ் (2), சுல்தான்பூரில் (2), அணிக்காக (2), அறிமுகமானார் (2), இழப்பிற்கு (2), கட்சிகளுக்கு (2), சின்னம் (2), ஒதுக்கும் (2), விவகாரத்தில் (2), வேண்டும் (2), ஜெய்சங்கர் (2), தோல்வியை (2), பத்திரம் (2), தழுவியது (2), விமானங்களின் (2), இன்னும் (2), நடைபெற்ற (2), மாடலின் (2), விலை (2), எக்ஸ் (2), தலையை (2), இறக்கைகளும் (2), சன்ரைசர்ஸ் (2), 2019 (2), பதவி (2), பெற்ற (2), சொல்வதைத்தான் (2), தென்னாப்பிரிக்க (2), பிரமாணப் (2), எக்ஸ்பிரஸ் (2), வருவாய் (2), படைத்தார் (2), இயக்குனரகம் (2), சாதனையைப் (2), பெற்றார் (2), மோசமான (2), விசாரணைக்கு (2), போக்குவரத்து (2), வெளியிடப்பட்டுள்ளது (2), போட்டியிலேயே (2), அறிமுகப் (2), வரலாற்றில் (2), india (2), அடித்து (2), மீண்டெழுந்து (2), கண்டிப்பாக (2), செய்யக்கூடிய (2), சென்றுள்ளார் (2), அறிவிக்கிறது (2), முதற்கட்ட (2), வரும் (2), தெரிந்து (2), தமிழ்நாட்டிற்கு (2), வந்து (2), போட்டியிட்டு (2), செய்யப்பட்ட (2), முத்திரைத்தாளை (2), நீதிமன்ற (2), வயதாகும் (2), வேட்பாளர் (2), கோவை (2), அட்ஜஸ்ட் (2), தப்பினர் (2), அமைச்சராக (2), இருக்கும் (2), காந்திக்கு (2), க்களுக்கு (2), வெளிப்படுத்தும் (2), இத்துடன் (2), டிரிபில் (2), டிரிபியூட் (2), தேர்தலில் (2), கடைசி (2), அதிர்ஷ்டவசமாக (2), வழக்கில் (2), இருப்பேன் (2), அதிர்ச்சியை (2), ஒதுக்கீடு (2), வீட்டுமனை (2), வழக்குகளை (2), உறுப்பினராக (2), kanagaraj (2), வாரிய (2), lokesh (2), மக்களுக்கு (2), விமானங்கள் (2), கடிதம் (2), housing (2), இந்தச் (2), கூறப்படுகிறது (2), allotment (2), நேற்று (2), நோக்கி (2), ஆதரவாளர்கள் (2), எதிரான (2), விசாரிக்கும் (2), மேற்கு (2), எவ்வித (2), இதில் (2), வழக்கு (2), உள்ளிட்டோருக்கு (2), 2012 (2), bravo (2), அமைந்தது (2), லாபகரமாக (2), வழங்கப்படுகிறது (2), ரீதியிலும் (2), வசூல் (2), செய்த (2), நிலையத்தில் (2), தகவலும் (2), அந்த (2), இம்முறை (2), இருக்கிறார் (2), அறிவிப்பு (2), வழங்கவில்லை (2), கோர்ட்டு (2), முன்னாள் (2), தொகுதியில் (2), election (2), சிலிண்டர்கள் (2), பைக்கிலும் (2), லியோ (2), மூன்று (2), இன்லைன் (2), 660சிசி (2), எந்த (2), காங்கிரஸ் (2), இருந்தது (2), புறப்பட்டது (2), செங்கல்பட்டு (2), தரவரிசை (2), ஆன்மிகம் (2), recap (2), தகவல்களை (2), பற்றிய (2), படங்களைப் (2), ரிலீசான (2), கிசுகிசு (2), விருதுநகர் (2), தெரிந்துக் (2), விழுப்புரம் (2), வேலூர் (2), திருவண்ணாமலை (2), திருவள்ளூர் (2), திரையரங்குகளில் (2), திருப்பூர் (2), அருகாமையில் (2), கார்த்தி (2), ராயல்ஸ் (2), உடனுக்குடன் (2), கொள்ள (2), திருவாரூர் (2), மேஷம் (2), துலாம் (2), கன்னி (2), சிம்மம் (2), கடகம் (2), மிதுனம் (2), ரிஷபம் (2), குறிப்பிடத்தக்கது (2), ஆவது (2), க்ளிக் (2), ராசி (2), பலன் (2), திருவிழா (2), இயக்கத்தில் (2), விளையாட்டு (2), ஆன்மிக (2), களஞ்சியம் (2), லிங்க் (2), அரியலூர் (2), தூத்துக்குடி (2), திருப்பத்தூர் (2), தனுசு (2), காஞ்சிபுரம் (2), bjp (2), நாகப்பட்டினம் (2), மயிலாடுதுறை (2), மதுரை (2), கிருஷ்ணகிரி (2), கரூர் (2), கன்னியாகுமரி (2), கள்ளக்குறிச்சி (2), ஈரோடு (2), நீலகிரி (2), home (2), திண்டுக்கல் (2), தர்மபுரி (2), கடலூர் (2), கோயம்புத்தூர் (2), புதுச்சேரி (2), உள்ளூர் (2), நாமக்கல் (2), பெரம்பலூர் (2), திருநெல்வேலி (2), மிரட்டல் (2), வெற்றியை (2), திருச்சிராப்பள்ளி (2), தென்காசி (2), cinema (2), அணியும் (2), வெளியிட்டது (2), லுக்கில் (2), ஜெய்பூரில் (2), தேனி (2), தஞ்சாவூர் (2), தொடரின் (2), சிவகங்கை (2), சேலம் (2), ராணிப்பேட்டை (2), ராமநாதபுரம் (2), புதுக்கோட்டை (2), பலப்பரீட்சை (2), விருச்சகம் (2), செய்யவும் (2), மகரம் (2), சூர்யாவை (2), கட்டுரைகள் (2), மாநில (2), கதம்பம் (2), உண்மை (2), எது (2), இயக்கவிருக்கிறார் (2), புதுசு (2), தமிழ் (2), பதிப்பு (2), ஸ்டோரீஸ் (2), வெப் (2), ஷாட்ஸ் (2), ட்ரெண்டிங் (2), தொடர்புகொள்ள (2), சிறப்புக் (2), ராகவா (2), கார் (2), டி20 (2), wtc (2), பிரதிபலிக்கும் (2), இறுதிப்போட்டி (2), குவெண்டின் (2), இயக்குனரான (2), பிரபல (2), பாணி (2), காமன்வெல்த் (2), உலக (2), கும்பம் (2), கோப்பை (2), போட்டி (2), லாரன்ஸ் (2), அடுத்தபடம் (2), நடிகர் (2), பெண்கள் (2), தொழில்நுட்பம் (2), இந்தப்படம் (2), சமையல் (2), tariff (2), குறிப்புகள் (2), சமூக (2), annamalai (2), விதிமுறைகள் (2), லைஃப்ஸ்டைல் (2), web (2), updated (2), பெற்றவர் (2), அழகுக் (2), நிபந்தனைகள் (2), தனித்தன்மை (2), எங்களைப்பற்றி (2), ஆட்டோமொபைல்ஸ் (2), அறிந்து (2), கொள்ளுங்கள் (2), கேஜெட்டுகள் (2), மொபைல்ஸ் (2), பாதுகாப்பு (2), மீனம் (2), கதைக்களமாக (2), உங்களுடனான, குறிப்பிட்டுள்ளார், கேட்கிறேன், முடிவடைகிறது, பதவிக்காலம், கூட, தொடர்பு, உலகக், மட்டுமே, கோப்பையில், மோடியை, முடிவுக்கு, வழங்கப்படவில்லை, செய்ததால்தான், கூறியுள்ளதாவது, எழுதியுள்ளார், இப்போது, எடுக்காமல், உருக்கமாக, அண்மையில், அற்புதமானவர்கள், வரலாம், மக்கள், உங்களுடன், தலைமை, வழங்காதது, விமர்சனம், மூச்சு, மனிதனாக, வயதிற்குட்பட்டோருக்கான, ஐசிசி, ஆசீர்வாதத்தை, உங்களோடு, எடுத்து, அணியின், 278, அடித்தால், gandhi, varun, இமாலய, இலக்குடன், களம், இறங்கிய, 246, ஊக்கப்படுத்திய, வீரரை, pilibhit, குவித்தது, 277, ரன், வித்தியாசத்தில், சீசனில், ராஜிவ், பேட்டிங், முதலில், நடத்தின, மைதானத்தில், பின்னர், constituency, திறந்தே, சாதனை, எப்போதும், கதவுகள், தொடர்நாயகன், வீட்டின், உங்களுக்காக, விருது, வென்று, மகனாக, மாட்டேன், இருக்க, இனி, இல்லை, parliment, அதிர்ஷ்டம், படைத்த, எனக்கு, உழைத்துள்ளேன், கடுமையாக, வளர்ச்சிக்காக, பதவிக்காலத்தில், அடைகிறேன், திருப்தி, பணியாற்றியதில், அவர்களுக்கு, அரசின், அடைந்தது, ஏற்படுத்தியது, தீரர், இதுகுறித்து, புகைப்படத்துக்கு, முன்னிட்டு, நாளை, பிறந்த, தொடரப்பட்டது, சத்தியமூர்த்தியின், 2006, 2011, குற்றச்சாட்டு, வசதித்துறை, பவனில், சத்தியமூர்த்தி, ஆசைப்படுகிறார்கள், வகித்தார், தற்போது, ஆகியோர், அனுபவிப்பதற்கு, கூட்டுறவுத்துறை, எழுந்தது, ஒதுக்கியதாக, அதிகாரத்தை, வீட்டை, பணமா, இல்லாத, சீதாராமனிடம், அத்தனை, நடைபெற்றது, இன்று, வாரியத்துக்கு, சொந்தமான, நிகழ்வு, மறைந்த, முறைகேடாக, முதலமைச்சர், செலுத்தும், கருணாநிதியின், பாதுகாவலராக, வேலை, போலீஸ், அதிகாரி, மரியாதை, கணேசனுக்கு, வகித்து, வருகிறார், 2008, அதன், பணமில்லை, கமிட்டி, பேசிய, மோடி, செய்தியாளர்களிடம், பின், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான, தெரிவித்துள்ளார், சொல்கிறார், உள்ளோம், நம்பி, மக்களை, நாங்கள், நம்பியே, வரித்துறை, உள்ளிட்ட, மத்திய, அமைப்புகளை, நிதியமைச்சர், உத்தரவு, sitharaman, பெரியசாமியின், jaishankar, ஆட்சி, murugan, tamilisai, selvaperunthakai, nirmala, முருகன், சீதாரமனை, இல்லாமல், சிரமமும், எந்தவித, சுத்தாமல், வெயிலில், உள்ளதா, பணம், முருகனிடம், விட, தமிழிசையிடம், உத்தரவிட்டது, இதற்கிடையே, லக்னோ, டாஸ், நடைபெறும், இவரது, மோதுகின்றன, தாய், மேனகா, லீக், உள்ளன, தலைமையின், 2014, விளையாடி, செயல், ஏற்படுத்தியுள்ளது, முன்னணி, தலைவரான, தலா, தொடரில், களமிறங்குகிறது, முனைப்பில், வென்ற, தேர்தல்களில், பதிவு, வழங்கியது, update, tamilnadu, chennai, newspaper, latest, அவருக்குப், பதில், ஜிதின், பிரசாதாவுக்கு, உத்தர, தோல்வி, பிரதேசத்தின், மக்களவை, மலர், 2009, அணிக்கு, நடைபெறுகிறது, ஆண்டுகளில், இன்றைய, செய்யும், வில், கேள்வி, ஐகோர்ட்டு, தள்ளிவைக்க, கோரிய, மனுவை, செய்து, நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது, உத்தரவை, மறுஆய்வு, செய்ய, நீதிபதி, விலக்கு, ஆனந்த், வெங்கடேஷ், தாமாக, முன்வந்து, வழக்கை, எடுத்தார், பெரியசாமியை, விடுவித்து, மாதம், விசாரணையை, ஆஜராவதில், board, மீண்டும், வழங்க, மறுத்த, எழுதிய, உத்தரப், பிரதேசம், வாரியம், irregularity, தொடர, petition, நேரில், dismiss, rrvsdc, periyasamy, royals, rajasthan, மீதான, capitals, delhi, பாகம், அதனால், நேவிகேஷன், ஆயிரம், ஷோரூம், நிர்ணயம், செய்யப்பட்டு, இரண்டு, ரைடிங், மோட்கள், டிராக்ஷன், கண்ட்ரோல், ஆல், லைட்டிங், ஆட்டோ, கேன்சலிங், இன்டிகேட்டர்கள், வழங்கப்பட்டுள்ளன, பைக்கின், டியுபுலர், ஃபிரேமுடன், ஷோவா, லட்சத்து, பிரீலோடு, செய்துள்ளதை, வைக்கப்பட்டது, நீமன்ற, கட்டணத்துக்கு, அல்லாத, பயன்படுத்தியே, செய்யப்பட, விதி, விதிகளுக்கு, மாறாக, சுட்டிக்காட்டி, சந்தையில், அளிக்கப்பட்டது, ஏற்கப்பட்டதற்கு, ஆணையத்தில், கட்சியினர், அளித்தனர், வெளியீடு, மோட்டார்சைக்கிள், motorcycle, triumph, இந்திய, ஃபோர்க், மோனோஷாக், அறிவிக்க, கிராஃபிக், மெட்டாலிக், புளூ, ஆங்காங்கே, ரெட், ஸ்டிரீக், ஃபினிஷ், கொண்டிருக்கிறது, எண்ணின், இடம்பெற்று, டிஸ்டின்டிவ், நிறத்திற்கு, ஒற்றுப்போகும், நிறத்தில், ஃபிளை, ஸ்கிரீன், பெல்லிபேன், இவை, மாடலை, ஸ்டான்டர்டு, எடிஷனில், வைட், கியர்பாக்ஸ், யூனிட், மேற்கொள்ளப்படவில்லை, பிரேக்கிங்கிற்கு, முன்புறம், இரட்டை, 310mm, டிஸ்க்குகள், பின்புறம், 255mm, டிஸ்க், மெக்கானிக்கல், மாற்றமும், ஸ்பீடு, ஹெச், பவர், நியூட்டன், மீட்டர், டார்க், இழுவிசையை, திறன், கொண்டுள்ளது, கோரிக்கை, செல்லாது, மாற்றுகிறது, தமி, சண்முகம், ஆசிரியர், surya44, jyothika, surya, karthick, subbaraj, செய்தி, பின்பு, ஜோதிகா, படப்பிடிப்பு, அடுத்த, மாதத்திலிருந்து, துவங்கும், எதிர்பார்க்கப்படுகிறது, சுப்பராஜின், இப்படத்தின், மேல், ரசிகர்கள், சமாளித்த, உளறி, உருவாகியுள்ளது, menu, saved, trending, shots, stories, சிட்டி, கேங்க்ஸ்டராக, மாறிய, வைபவ், சின்னமா, மியாமி, ஓபன், அரையிறுதியில், மெட்வதேவ், சின்னர், கஷ்டமப்பா, தேமுதிகவிற்கு, பம்பரம், எதிர்பார்ப்பு, சூர்யாவின், வேட்புமனுவை, ஹாலிவுட், மூலம், சினிமாவிற்கு, இயக்குனராக, அறிமுகமானவர், வித்தியாசமான, கதைக், களங்களில், எடுப்பதில், திறம், டேரண்டின்னோ, இயக்கினார், nomination, அளிக்கப்பட்ட, ஜூடிஷியல், non, judicial, வெளியிட்டுள்ளது, விதிக்கு, முரணாக, பயன்படுத்தியுள்ளதால், பீட்சா, திரைப்படத்தை, இதற்கான, இயக்குவதில், அதீகாரப்பூர்வ, அறிவிப்பை, வலைத்தளப், பகிர்ந்துள்ளார், கேங்க்ஸ்டர், காதல், பின்னணியில், உருவாகவுள்ளது, சினிமாவையே, திரைப்படம், வல்லமை, வாய்ந்தவர், மக்களிடையே, போட்டு, நடித்துருப்பர், ஹாலிவுட்டின், டேரண்டின்னோவை, இணைந்து, நடித்த, ஜிகர்தண்டா, வித்தியாசமானதாக, நிறுவனம், விளாசினார்கள், உருவெடுத்திருப்பவர், ஏற்கனவே, வெளியாகிவிட்டது, எனினும், வேறு, வெளியாகாமல், சினிமாவில், முக்கிய, இயக்குநர்களில், ஒருவராக, கடைசியாக, தொடர்ந்து, வெளியான, நல்ல, வரவேற்பை, வெளியாகவில்லை, dwayne, kwena, maphaka, pollard, srhvmi, உயர்த்து, இயக்க, பகிர்ந்து, பெரிய, வெளியானது, ஏப்ரல், ஆம், தேதி, வெளியிடப்படும், என்றும், தெரிவித்து, யாரும், எதிர்பாராத, நேரத்தில், அவரின், அக்கவுண்டில், ரசிகர்களை, மகிழ்ச்சியில், ஆழ்த்தியுள்ளது, புது, வெளியிட்டு, உடன், படத்திற்கான, தோற்றத்தை, புகைப்படத்தை, அதிகாரப்பூர்வ, இளைஞனே, விஷயங்கள், தலைப்பு, தொடர், சொல்வேன், போட்டியை, உன், சந்தேகப்பட, துவங்கி, விடாதே, உனக்கு, சவால், இந்தத், செல்லும், சாம்பியன், போது, முன்னேற்றமடைவாய், மபாகாவுக்கு, உத்வேகம், கொடுக்கும், ட்வயன், இன்ஸ்டாகிராம், அப்போட்டியில், ஹைதராபாத், பேட்ஸ்மேன்கள், உறுதியாக, வைத்துக்கொள், அடைய, உங்களது, குடும்பத்தினர், அன்புக்குரியவர்கள், உங்களை, நினைத்து, மிகவும், பெருமைப்படுவார்கள், நம்புகிறேன், கெரியரில், நாள், கடினமாக, எதிர்காலம், நிமிர்ந்து, பிரகாசமாக, ஏன்னு, அதே, போல, கைரன், பொல்லார்ட்டும், இன்ஸ்டாகிராமில், அவருக்கு, ஆதரவாக, உன்னுடைய, டீசர், இசையமைக்கிறார், மோட்டார்சைக்கிளை, தெரிவித்தது, airport, சம்பவம், குறித்து, உத்தரவிட்டுள்ள, நிறுவனங்களின், ஊழியர்களிடமும், விரிவான, விசாரணை, நடத்தப்படும், சேதமடைந்ததால், air, கீழே, இறக்கி, விடப்பட்டு, மாற்று, விமானங்களால், அவர்கள், அனுப்பி, வைக்கப்பட்டனர், அப்போது, உரசியதாகவும், kolkatta, indigo, சாதுரியமாக, வெற்றிகளை, அறிமுகம், ஆகும், பிரத்யேக, பெயின்ட், விசேஷ, அக்சஸரீக்கள், வழங்கப்படுகின்றன, 1970, க்களில், ஸ்லிப்பரி, dgca, சாம், ரேஸ், பைக்கை, நினைவு, கூறும், இந்தியாவில், அறிமுகமான, அம்சங்கள், என்னென்ன, நிலையம், விமானிகள், செயல்பட்டதால், அனிருத், twitter, ஓடிய, மோதலில், தப்பிய, வங்காளம், thalaivar, rajinikanth, dir_lokesh, april, pic, com, கொண்டன, ekxfdnjnhd, thalaivar171titlereveal, போஸ்டர், வலைதளங்களில், வைரல், ஆகி, வருகிறது, சன், பிக்சர்ஸ், தயாரிக்கும், உரசிக், திசை, வங்காள, திருப்பப்பட்டு, விபத்து, தவிர்க்கப்பட்டதும், தெரிய, வந்தது, இச்சம்பவத்தின்போது, விமானங்களில், இருந்த, காயமும், இன்றி, மாநிலத்தின், கொல்கத்தாவில், பீகாரின், தர்பங்கா, அதேபோல், ஒன்று, பயணிகளுடன், சென்ற, விமானங்களும், சென்றதாகக், சம்பவத்தில், காயங்களின்றி, maalaimalar,
Text of the page (random words):
ம் விவகாரத்தில் பிரதமர் சொல்வதைத்தான் தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது முதற்கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் வரும் என்பது தெரிந்து தான் பிரதமர் பல முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளார் மோடி தேர்தல் ஆணையம் அமலாக்கத்துறை சிபிஐ வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசின் அமைப்புகளை நம்பியே உள்ளார் ஆனால் நாங்கள் மக்களை நம்பி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன் செல்வப்பெருந்தகை தமிழிசை எல் முருகன் ஜெய்சங்கர் nirmala sitharaman selvaperunthakai tamilisai l murugan jaishankar தமிழ்நாடு சென்னை வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு ஐ பெரியசாமியின் மனு தள்ளுபடி 28 march 2024 1 13 pm gmt அ தி மு க ஆட்சிக்காலத்தில் 2012 ம் ஆண்டு அமைச்சர் ஐ பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு 2023 ம் ஆண்டு மார்ச் எம் பி எம் எல் ஏ க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு உத்தரவு மேலும் படிக்க தமிழ்நாட்டில் 2006 ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரை நடந்த தி மு க ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ பெரியசாமி பதவி வகித்தார் தற்போது இவர் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் கடந்த 2008 ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் பாதுகாவலராக வேலை செய்த போலீஸ் அதிகாரி கணேசனுக்கு முறைகேடாக ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது இதுகுறித்து அ தி மு க ஆட்சிக்காலத்தில் 2012 ம் ஆண்டு அமைச்சர் ஐ பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கில் இருந்து ஐ பெரியசாமியை விடுவித்து கடந்த 2023 ம் ஆண்டு மார்ச் மாதம் எம் பி எம் எல் ஏ க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார் இந்நிலையில் அமைச்சர் ஐ பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது i periyasamy petition dismiss housing board housing allotment allotment irregularity ஐ பெரியசாமி மனு தள்ளுபடி வீட்டு வசதி வாரியம் முறைகேடு இந்தியா உத்தரப் பிரதேசம் மீண்டும் வாய்ப்பு வழங்க மறுத்த பா ஜ க தொகுதி மக்களுக்கு வருண் காந்தி எழுதிய கடிதம் 28 march 2024 1 09 pm gmt முன்னணி தலைவரான வருண் காந்திக்கு பா ஜ க வில் இம்முறை போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை தலைமையின் இந்தச் செயல் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் படிக்க லக்னோ உத்தர பிரதேசத்தின் பிலிபித் மக்களவை தொகுதியில் பா ஜ க சார்பில் கடந்த 2009 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றவர் வருண் காந்தி 2014 ம் ஆண்டு சுல்தான்பூரில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார் இவரது தாய் மேனகா காந்தி 2019 ம் ஆண்டு சுல்தான்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலில் பிலிபித் தொகுதி உறுப்பினராக உள்ள வருண் காந்திக்கு இம்முறை போட்டியிட பா ஜ க வாய்ப்பு வழங்கவில்லை அவருக்குப் பதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதாவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியது வருண் காந்தி போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு வழங்காதது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது பிரதமர் மோடியை வருண் காந்தி விமர்சனம் செய்ததால்தான் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது இந்நிலையில் வருண் காந்தி தனது தொகுதி மக்களுக்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார் அதில் அவர் கூறியுள்ளதாவது பிலிபித் தொகுதி உறுப்பினராக இருக்கும் எனது பதவிக்காலம் முடிவடைகிறது எம் பி யாக உங்களுடனான தொடர்பு முடிவுக்கு வரலாம் ஆனால் ஒரு மனிதனாக எனது கடைசி மூச்சு வரை உங்களுடன் இருப்பேன் பிலிபித் மக்கள் அற்புதமானவர்கள் இந்த தொகுதியில் எம் பி யாக அவர்களுக்கு பணியாற்றியதில் திருப்தி அடைகிறேன் எனது பதவிக்காலத்தில் பிலிபித் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன் எனக்கு இந்த முறை அதிர்ஷ்டம் இல்லை இனி நான் உங்களோடு எம் பி யாக இருக்க மாட்டேன் நான் கடைசி வரை உங்கள் மகனாக இருப்பேன் உங்களுக்காக என் வீட்டின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் இப்போது நான் உங்கள் ஆசீர்வாதத்தை மட்டுமே கேட்கிறேன் என குறிப்பிட்டுள்ளார் parliment election pilibhit constituency bjp varun gandhi பாராளுமன்ற தேர்தல் பிலிபித் தொகுதி பாஜக வருண் காந்தி கிரிக்கெட் கண்டிப்பாக நீ மீண்டெழுந்து வருவாய் மும்பை அணியின் இளம் வீரரை ஊக்கப்படுத்திய ப்ராவோ 28 march 2024 12 52 pm gmt 17 வயதாகும் இளம் தென்னாப்பிரிக்க வீரர் க்வேனா மபாகா மும்பை அணிக்காக அறிமுகமானார் ஐபிஎல் வரலாற்றில் அறிமுகப் போட்டியிலேயே அதிக ரன்கள் கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்தார் மேலும் படிக்க ஐபிஎல் 2024 சீசனில் நேற்று ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின இதில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது பின்னர் 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் அடித்து 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது அண்மையில் நடந்த 19 வயதிற்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பையில் அதிக விக்கெட் எடுத்து தொடர்நாயகன் விருது வென்று சாதனை படைத்த 17 வயதாகும் இளம் தென்னாப்பிரிக்க வீரர் க்வேனா மபாகா மும்பை அணிக்காக அறிமுகமானார் அப்போட்டியில் அவரது பந்துவீச்சை இந்த போட்டியில் ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் அடித்து விளாசினார்கள் அதனால் 4 ஓவரில் 1 விக்கெட் கூட எடுக்காமல் 66 ரன்கள் கொடுத்த அவர் ஐபிஎல் வரலாற்றில் அறிமுகப் போட்டியிலேயே அதிக ரன்கள் கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்தார் இந்நிலையில் இளம் வீரர் க்வேனா மபாகாவுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் ட்வயன் ப்ராவோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் உன்னுடைய தலையை நிமிர்ந்து வைத்துக்கொள் சாம்பியன் கண்டிப்பாக நீ மீண்டெழுந்து வருவாய் என்று உறுதியாக சொல்வேன் இந்த ஒரு போட்டியை வைத்து உன் மீது சந்தேகப்பட துவங்கி விடாதே இது உனக்கு மிகப்பெரிய சவால் இந்தத் தொடர் செல்லும் போது தான் இன்னும் நீ முன்னேற்றமடைவாய் என்று பதிவிட்டுள்ளார் அதே போல கைரன் பொல்லார்ட்டும் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் அவருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார் அதில் தலையை உயர்த்து இளைஞனே இன்னும் பெரிய விஷயங்கள் அடைய வேண்டும் உங்கள் குடும்பத்தினர் அன்புக்குரியவர்கள் உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன் கெரியரில் முதல் நாள் கடினமாக இருந்தது ஆனால் உங்களது எதிர்காலம் பிரகாசமாக உள்ளது ஏன்னு பதிவிட்டுள்ளார் ipl 2024 srhvmi ஐபிஎல் 2024 ப்ராவோ க்வேனா மபாகா bravo pollard kwena maphaka dwayne bravo சினிமா செய்திகள் மிரட்டல் லுக்கில் ரஜினிகாந்த் தலைவர் 171 அப்டேட் கொடுத்த லோகேஷ் 28 march 2024 12 46 pm gmt வசூல் ரீதியிலும் இந்த படம் லாபகரமாக அமைந்தது இந்த படம் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை மேலும் படிக்க தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்திருப்பவர் லோகேஷ் கனகராஜ் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ படம் நல்ல வரவேற்பை பெற்றது வசூல் ரீதியிலும் இந்த படம் லாபகரமாக அமைந்தது இந்த நிலையில் லியோ படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார் இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது எனினும் இந்த படம் தொடர்பாக வேறு எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது அந்த வகையில் ரஜினிகாந்த் 171 படம் தொடர்பான புது அப்டேட் ஐ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு உள்ளார் அப்டேட் உடன் தலைவர் 171 படத்திற்கான ரஜினிகாந்த் தோற்றத்தை வெளிப்படுத்தும் புகைப்படத்தை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் பகிர்ந்து இருக்கிறார் மேலும் தலைவர் 171 படத்தின் தலைப்பு கொண்ட டீசர் வீடியோ ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து உள்ளார் யாரும் எதிர்பாராத நேரத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது மேலும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நிலையில் அனிருத் இசையமைக்கிறார் thalaivar171titlereveal on april 22 pic twitter com ekxfdnjnhd lokesh kanagaraj dir_lokesh march 28 2024 உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க் ஐ க்ளிக் செய்யவும் ரஜினிகாந்த் தலைவர் 171 லோகேஷ் கனகராஜ் rajinikanth thalaivar 171 lokesh kanagaraj இந்தியா மேற்கு வங்காளம் ஒரே ரன்வேயில் ஓடிய இரு விமானங்கள் மோதலில் உயிர் தப்பிய பயணிகள் 28 march 2024 12 34 pm gmt கொல்கத்தாவில் ஏர் இந்தியா இண்டிகோ விமானங்கள் ஒரே ரன்வேயில் உரசிக் கொண்டன இந்தச் சம்பவத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர் தப்பினர் மேலும் படிக்க கொல்கத்தா மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து பீகாரின் தர்பங்கா நோக்கி இண்டிகோ விமானம் நேற்று புறப்பட்டது அதேபோல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டது பயணிகளுடன் சென்ற இரு விமானங்களும் ஒரே ரன்வேயில் சென்றதாகக் கூறப்படுகிறது அப்போது இரு விமானங்களின் இறக்கைகளும் உரசியதாகவும் விமானிகள் சாதுரியமாக செயல்பட்டதால் விமானம் திசை திருப்பப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டதும் தெரிய வந்தது இச்சம்பவத்தின்போது விமானங்களில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர் இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்ததால் பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டு மாற்று விமானங்களால் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர் கொல்கத்தா விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள விமான போக்குவரத்து இயக்குனரகம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ நிறுவனங்களின் ஊழியர்களிடமும் விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தது kolkatta airport air india indigo dgca கொல்கத்தா விமான நிலையம் ஏர் இந்தியா இண்டிகோ விமான போக்குவரத்து இயக்குனரகம் பைக் இந்தியாவில் அறிமுகமான டிரைடன்ட் 660 ஸ்பெஷல் எடிஷன் மாடல் விலை அம்சங்கள் என்னென்ன 28 march 2024 12 28 pm gmt டிரைடன்ட் 660 ஸ்பெஷல் எடிஷன் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது இந்த பைக்கிலும் 660சிசி இன்லைன் மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது மேலும் படிக்க டிரையம்ப் நிறுவனம் தனது டிரைடன்ட் டிரிபில் டிரிபியூட் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது இது டிரைடன்ட் 660 மாடலின் ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஆகும் புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலில் பிரத்யேக பெயின்ட் மற்றும் விசேஷ அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன 1970 க்களில் அதிக வெற்றிகளை பெற்ற ஸ்லிப்பரி சாம் ரேஸ் பைக்கை நினைவு கூறும் வகையில் டிரைடன்ட் 660 ஸ்பெஷல் எடிஷன் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது டிரைடன்ட் டிரிபில் டிரிபியூட் மாடல் டிஸ்டின்டிவ் வைட் மற்றும் மெட்டாலிக் புளூ ஆங்காங்கே ரெட் ஸ்டிரீக் ஃபினிஷ் கொண்டிருக்கிறது இத்துடன் 67 எண்ணின் கிராஃபிக் இடம்பெற்று இருக்கிறது மேலும் இந்த நிறத்திற்கு ஒற்றுப்போகும் நிறத்தில் ஃபிளை ஸ்கிரீன் மற்றும் பெல்லிபேன் வழங்கப்பட்டு இருக்கிறது இவை இந்த மாடலை ஸ்டான்டர்டு எடிஷனில் இருந்து வித்தியாசமானதாக மாற்றுகிறது மெக்கானிக்கல் வகையில் டிரையம்ப் டிரைடன்ட் 660 மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை அந்த வகையில் இந்த பைக்கிலும் 660சிசி இன்லைன் மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது இந்த என்ஜின் 81 ஹெச் பி பவர் 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது இந்த பைக்கின் டியுபுலர் ஃபிரேமுடன் ஷோவா யு எஸ் டி ஃபோர்க் மற்றும் பிரீலோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது பிரேக்கிங்கிற்கு முன்புறம் இரட்டை 310mm டிஸ்க்குகள் பின்புறம் 255mm டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது டிரைடன்ட் மாடலில் இரண்டு ரைடிங் மோட்கள் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல் நேவிகேஷன் வசதி ஆல் எல் இ டி லைட்டிங் மற்றும் ஆட்டோ கேன்சலிங் இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன இந்திய சந்தையில் புதிய டிரையம்ப் டிரைடன்ட் 660 மாடலின் விலை ரூ 8 லட்சத்து 12 ஆயிரம் எக்ஸ் ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது triumph motorcycle டிரையம்ப் மோட்டார்சைக்கிள் தமிழ்நாடு சென்னை அண்ணாமலை வேட்புமனு மீது புகார் ஆவண நகலை வெளியிட்டது மாவட்ட நிர்வாகம் 28 march 2024 12 27 pm gmt updated 28 march 2024 1 47 pm gmt முத்திரைத்தாளில் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நகல் வெளியீடு அண்ணாமலை வேட்புமனு தொடர்பாக அதிமுக நாம் தமிழர் கட்சி சார்பில் புகார் மேலும் படிக்க கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்தனர் தேர்தல் விதிகளுக்கு மாறாக அண்ணாமலை நீதிமன்ற முத்திரைத்தாளில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதை சுட்டிக்காட்டி புகார் அளிக்கப்பட்டது நீமன்ற கட்டணத்துக்கு அல்லாத முத்திரைத்தாளை பயன்படுத்தியே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது விதி தேர்தல் விதிக்கு முரணாக நீதிமன்ற முத்திரைத்தாளை அண்ணாமலை பயன்படுத்தியுள்ளதால் அவரது வேட்புமனுவை செல்லாது என அறிவிக்க கோரிக்கை வைக்கப்பட்டது இந்நிலையில் கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு தொடர்பான ஆவண நகலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது நான் ஜூடிஷியல் non judicial முத்திரைத்தாளில் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நகல் வெளியிடப்பட்டுள்ளது அண்ணாமலை வேட்புமனு தொடர்பாக அதிமுக நாம் தமிழர் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நகல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது annamalai bjp annamalai nomination அண்ணாமலை வேட்புமனு ஆவண நகல் பாஜக சினிமா செய்திகள் சூர்யா 44 படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் 28 march 2024 12 22 pm gmt updated 28 march 2024 12 36 pm gmt இவர் படம் இயக்கும் பாணி ஹாலிவுட் பிரபல இயக்குனரான குவெண்டின் டேரண்டின்னோ பிரதிபலிக்கும் இந்நிலையில் கார்த்தி சுப்பராஜ் அடுத்தபடம் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கவிருக்கிறார் மேலும் படிக்க பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ் வித்தியாசமான கதைக் களங்களில் படம் எடுப்பதில் கார்த்திக் சுப்பராஜ் திறம் பெற்றவர் இவர் படம் இயக்கும் பாணி ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான குவெண்டின் டேரண்டின்னோவை பிரதிபலிக்கும் ராகவா லாரன்ஸ் எஸ் ஜே சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா பாகம் 2 திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கினார் மக்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்தப்படம் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா போட்டி போட்டு நடித்துருப்பர் சினிமாவையே கதைக்களமாக வைத்து திரைப்படம் இயக்குவதில் கார்த்திக் சுப்பராஜ் வல்லமை வாய்ந்தவர் இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் அடுத்தபடம் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கவிருக்கிறார் சூர்யாவின் 44 ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது இதற்கான அதீகாரப்பூர்வ அறிவிப்பை சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ் இந்தப்படம் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியில் கதைக்களமாக உருவாகவுள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்திலிருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இப்படத்தின் மேல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க் ஐ க்ளிக் செய்யவும் கார்த்தி சுப்பராஜ் சூர்யா ஜோதிகா சினிமா சினிமா செய்தி 2024 மார்ச் தமி சினிமா karthick subbaraj surya jyothika surya44 tamil cinema cinema news ஆசிரியர் தேர்வு அண்ணாமலை வேட்புமனு மீது புகார் ஆவண நகலை வெளியிட்டது மாவட்ட நிர்வாகம் 28 march 2024 12 27 pm gmt மிரட்டல் லுக்கில் ரஜினிகாந்த் தலைவர் 171 அப்டேட் கொடுத்த லோகேஷ் 28 march 2024 12 46 pm gmt ஒரே கஷ்டமப்பா தேமுதிகவிற்கு பம்பரம் சின்னமா உளறி பின்பு சமாளித்த சி வி சண்முகம் 28 march 2024 10 30 am gmt மியாமி ஓபன் அரையிறுதியில் மெட்வதேவ் சின்னர் பலப்பரீட்சை 28 march 2024 7 11 am gmt சென்னை சிட்டி கேங்க்ஸ்டராக மாறிய வைபவ் 28 march 2024 9 47 am gmt home stories shots trending saved menu செய்திகள் தமிழ்நாடு புதுச்சேரி இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் சென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை மயிலாடுதுறை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தென்காசி திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர் சினிமா சினிமா செய்திகள் தரவரிசை கிசுகிசு ஓ டி டி recap 2023 வீடியோ ஆன்மிகம் ஆன்மிக களஞ்சியம் பாராளுமன்ற தேர்தல் 2024 விளையாட்டு ஐ பி எல் திருவிழா 2024 ராசி பலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம் லைஃப்ஸ்டைல் அழகுக் குறிப்புகள் சமையல் பெண்கள் உலகம் தொழில்நுட்பம் மொபைல்ஸ் புதிய கேஜெட்டுகள் அறிந்து கொள்ளுங்கள் ஆட்டோமொபைல்...
|